ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை: கிராம மக்கள் தர்ணா பாேராட்டம்

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை: கிராம மக்கள் தர்ணா பாேராட்டம்
X

தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கிராம மக்கள் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கிராம மக்கள் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பாேராட்டம் நடத்தினர்.

தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் தங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக்கோரி கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில், திப்பணம்பட்டி ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி, தெருவிளக்குகள், கழிவு நீரோடைகள், குப்பை மேலாண்மை செய்வது உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்படாமல் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பவில்லை.

இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட நிலையிலும் மக்களை அணுகி அதிகாரிகள் மனுவைப் பெற்றுக் கொள்ளாமல் மெத்தனப் போக்கில் செயல்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!