இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் பனை தொழிலாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் பனை தொழிலாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
X

இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவனத் தலைவர் ராகம் சௌந்தரபாண்டியன் நாடார்.

இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் பனை தொழிலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் கலிதீர்த்தான்பட்டியில் வரும் 6ம் தேதி நடைபெறுகிறது

இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் பனை தொழிலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கலிதீர்த்தான் பட்டியில் வரும் 6ந்தேதி நடைபெறுகிறது

இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் தென்காசி மாவட்டத்தில் 1000 ஆயிரம் பனைத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில் பனை பொருட்கள் மற்றும் பனை பொருட்களால் ஆன கலை பொருட்கள் உருவாக்கம் தொழிற்சாலை அமைப்பது குறித்த கலந்தாய்வு கூட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கலிதீர்த்தான் பட்டியில் வரும் 6ந்தேதி நடைபெறுகிறது.

தமிழகத்தில் கள் கடைகளில் வைத்து விற்பதற்கு 01/01 /1987 ல் தமிழக அரசு தடை விதித்தது எவ்வாறென்றால் கள் இறக்கி விற்பதற்கு தடை என்றும் இறக்கி குடிப்பதற்ககு தடை இல்லை என்றும் அறிவித்தது ஏன் இப்படி அறிவித்தது என்றால் கள் விற்பனை செய்யும் கடைகளில் குளோரல்ஹைட்ரேட்டைக் என்ற கெமிக்கலை கலந்து விற்பனை செய்கிறார்கள். அதற்காக கள்ளுக்கடைகளை திறக்க அனுமதி இல்லை என்று அன்றைய அரசு தடை விதித்தது மேலும் ஒவ்வொரு பனை மரமும் ஒவ்வொரு தொழிற்சாலை என்பதால் கள்ளில் கலக்கும் கலப்படங்களை தடுக்க முடியவில்லை கலப்படம் செய்வோரை கட்டுப்படுத்த முடியவில்லை என்று சொல்லி முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய அரசு கள்ளுக்கடை திறப்பதற்கு தடை விதித்தது.

இதனால் தமிழகம் முழுவதும் பனைத்தொழில் செய்து வந்த லட்சக்கணக்கான குடும்பங்கள் வருமானமின்றி பாதிக்கப்பட்டு இந்த தொழிலை விட்டுவிட்டு மாற்று தொழிலைத் தேடி சென்றார்கள் அதனால் பனை மரங்களை செங்கல் சூளை போன்றவைகளுக்கு எரிபொருளாக பனைகளை வெட்டி பயன்படுத்தி வந்தார்கள். இந்தச் சூழ்நிலையில் இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவனத் தலைவர் ராகம் சௌந்தரபாண்டியன் நாடார் தமிழக முதல்வர் முக ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார்.

பனை மரங்களை வெட்டுவதற்கு தடை செய்ய வேண்டும் பனை மரத்தை வெட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் கருப்பட்டி பனங்கற்கண்டு போன்ற உணவு பொருள்களை நியாய விலை கடையில் விற்பனை செய்ய வேண்டும். மாவட்டங்கள் தோறும் பனை பொருள் விற்பனை அங்காடி தொடங்க வேண்டும் பனை ஏறுபவர்களுக்கு மானிய விலையில் அல்லது பனை வாரியத்தின் மூலம் பனை ஏறுவதற்கு இயந்திரங்கள் கருவிகள் வழங்க வேண்டும் பனை தொழிலாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ அடையாள அட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர் பனைகளை வெட்ட தடை விதித்தார். கருப்பட்டி நியாயவிலை கடைகளில் வழங்குவதற்கு ஆணையிட்டார். பனைத் தொழிலை மேம்படுத்த பனை தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கருவிகள் வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்து இருக்கிறார். இதற்கு இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவனத்தலைவர் ராகம் சௌந்தரபாண்டியன் நாடார் தலைமையில் இந்திய நாடார்கள் பேரமைப்பு நிர்வாகிகள் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் தென்காசி மாவட்டத்தில் 1000 ஆயிரம் பனைத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில் பனையிலிருந்து கிடைக்கக் கூடிய பதநீர், நுங்கு, பனை பழம், பனை கிளங்கு போன்றவைகளைக் கொண்டு பல்வேறு விதமான உணவு பொருள்களும் பனை ஓலை மட்டை, நார் போன்றவைகளை வைத்து கலைப்பொருட்கள் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கின்ற தொழிற்சாலையை தென்காசி மாவட்டத்தில் தொடங்க இருக்கிறார். இந்த தொழிற்சாலை பல்வேறு நவீன இயந்திரங்களைக் கொண்டு செயல்பட இருக்கிறது.

இதற்காக தென்காசி மாவட்டத்திலுள்ள பனை தொழிலாளர்களை நேரில் சந்தித்து பனைத் தொழிலாளர்களோடு கலந்தாய்வு நடத்த திட்டமிட்டு ஆலங்குளம் அருகே உள்ள கலிதீர்த்தான் பட்டியில் உள்ள சிவசக்தி மஹாலில் 06/12/2021 அன்று மாலை 3 மணிக்கு இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவனத் தலைவர் ராகம் சௌந்தரபாண்டியன் நாடார் மற்றும் மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டு பனை தொழிலாளர்களுடன் கலந்தாய்வு நடத்த இருக்கின்றனர்

இந்த கூட்டத்திற்கு தென்காசி திருநெல்வேலி மாவட்ட பனை தொழிலாளர்கள் கலந்து கொள்ள வேண்டும். இந்திய நாடார்கள் பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் அன்போடு அழைக்கின்றார். இந்த விழாவை தென்காசி தெற்கு மாவட்ட தலைவர் ஹரிஹர செல்வன் வடக்கு மாவட்ட தலைவர் சூரியபிரகாஷ் தலைமையில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார். பனைத் தொழிலாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது.

Tags

Next Story