/* */

கீழக்கடையம் ஊராட்சியில் பனை விதைப்பு திருவிழா

பனை வாழ்வியல் இயக்கம் சார்பில் பனை விதைப்பு திருவிழா புலவனூர் சாலையோரம் உள்ள தங்கச்சியான்குளத்தில் நடைபெற்றது.

HIGHLIGHTS

கீழக்கடையம் ஊராட்சியில் பனை விதைப்பு திருவிழா
X

தென்காசி மாவட்டம் கீழக்கடையம் ஊராட்சி நிர்வாகம், மற்றும் பனை வாழ்வியல் இயக்கம் சார்பில், பனை விதைப்பு திருவிழா புலவனூர் சாலையோரம் உள்ள தங்கச்சியான்குளத்தில் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் பூமிநாத் தலைமை வகித்தார். பனை வாழ்வியல் இயக்க தலைவர் பா.ஜான்பீட்டர் முன்னிலை வகித்தார். ஊராட்சி துணை தலைவர் விக்டர் சேவியர் துரைசிங் வரவேற்றார்.

கடையம் தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் முத்துராமலிங்கம், புலவனூர் பணித்தள பொறுப்பாளர் பொன் பாண்டி, வார்டு உறுப்பினர் சங்கர், முன்னோடி விவசாயி கணேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். ஏற்பாடுகளை பனை வாழ்வியல் இயக்க நிர்வாகிகள் பாலசிங், தாமஸ் ஸ்டீபன் மெல்கி, சொரிமுத்து, கார்த்திக், தன்னார்வலர்கள் சுப்புக்குட்டி, ராசுக்குட்டி மற்றும் பலர் செய்திருந்தனர்.

முதற்கட்டமாக, தங்கச்சியான்குளத்தில் 500க்கும் மேற்பட்ட விதைகள் நடவு செய்யப்பட்டன. தொடர்ந்து தெற்கு கடையம், மடத்தூர், தெற்கு மடத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் பனை விதைகள் நடவு செய்யவும், குறுங்காடுகள் அமைக்கவும் திட்டமிட்டு உள்ளதாக பனை வாழ்வியல் இயக்க நிர்வாகிகள் தெரி்வித்துள்ளனர்.

Updated On: 10 Dec 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  2. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  7. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  10. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...