ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் நியமிக்க கோரிக்கை..!

ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் நியமிக்க கோரிக்கை..!
X

ஆலங்குளம் அரசு மருத்துவமனை (கோப்பு படம்)

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதன் மாவட்ட ஆட்சியரிடம் ஆலங்குளம் மருத்துவமனைக்கு மருத்துவர் நியமிக்க மனு அளித்துள்ளார்

தென்காசி மாவட்ட திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன் மாவட்ட ஆட்சியரின் சந்தித்து மனு அளித்தார் அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 2009 2010 நிதி ஆண்டில் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக அரசு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது

ஆனால் அங்கு போதிய மருத்துவர்கள் இல்லை குறிப்பாக பேர்காலம் பார்க்கிற பெண் மருத்துவர் இல்லை இது சம்பந்தமாக அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கிய பின்னர் கடந்த ஆண்டு சுஷ்மிதா என்கிற பெண் மருத்துவர் நியமிக்கப்பட்டார்

ஆலங்குளத்தில் நியமிக்கப்பட்ட பெண் மருத்துவர் சுஷ்மிதா கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சங்கரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு டைவர்ஸ்சன் செய்யப்பட்டு தற்போது சங்கரன் கோவிலில் பணிபுரிந்து வருகிறார் ஆலங்குளத்தில் பேர்கால வசதிக்கான மருத்துவர் யாரும் இல்லை

பேறுகாலத்திற்கு வருகிற தாய்மார்கள் அருகில் இருக்கிற கருமனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அல்லது நெட்ட்டூர் சுகாதார நிலையத்திற்கு சென்று விடுகிறார்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கிற வசதி கூட ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் இல்லை என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்

.இதனால் பொதுமக்கள் யாரும் ஆலங்குளம் அரசு மருத்துவமனை செல்வதில்லை. சுகப்பிரசவம் நடக்கிற பெண்களுக்கு கூட இங்கு சிகிச்சை அளிக்கப்படாமல் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.


அதேபோல ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர்கள் உள்ளார்கள் அறுவை சிகிச்சை தியேட்டரும் இருக்கிறது ஆனால் மயக்கவியல் மருத்துவர் இல்லை . அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இருந்தும் அறுவை சிகிச்சைகள் எதுவும் நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது

மேலும் பேர்காலத்திற்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிற பொழுது சில குழந்தைகள் இறக்க நேரிட்டிருக்கிறது. சில தாய்மார்களும் இறக்க நேரிட்டுள்ளது இதனால் சில பெற்றோர்கள் காவல் நிலைய வரை சென்று உள்ளார்கள்

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட இது போல ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டுள்ளது.ஆகையால் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உடனடியாக ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் நிரந்தரமாக பணி புரிகிற வகையில் ஆலங்குளம் மருத்துவமனையில் இருந்து சங்கரன்கோவில் மருத்துவமனைக்கு டைவர்ஸன் அடிப்படையில் பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ள மருத்துவர் சுஷ்மிதா அவர்களை ஆலங்குளத்திற்கு உடனடியாக நியமிக்க வேண்டும்.

ஒரு பெண் மருத்துவர் நிரந்தரமாக குழந்தை பேறுகால மருத்துவராக நியமித்திட வேண்டுமென்றும் அதே போல நிரந்தரமாக மயக்கவியல் மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் அன்புடன் வேண்டுகிறேன். என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
Will AI Replace Web Developers