ஆலங்குளம் அருகே தனியார் நிறுவன மேலாளர் கொலை: மர்ம நபர்கள் வெறிச் செயல்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுப்பையாபுரம் கிராமத்தில் தனியார் நிறுவன மேலாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வெறிச் செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகினறனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சுப்பையாபுரம் கிராமத்தில் ழிலிசி நிறுவனத்தின் சோலார் பவர் கிரிட் செயல்பட்டு வருகிறது. மேலும் ழிலிசி நிறுவனத்தின் ஒப்பந்த வேலைகளை தனியார் நிறுவனம் செய்துவருகிறது.

இந்த நிறுவனத்தின் கிளை துனை மேலாளராக சென்னையை சேர்ந்த தியாகராஜன் வயது (53) என்பவர் வேலை செய்து வருகிறார். அவருடன் சிவசைலத்தை சேர்ந்த கிருஷ்ணன் வயது (40) என்பவரும் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் இன்று 31ம் தேதி அலுவலக வளாகத்தில் வேலை பார்த்து வந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இரண்டு பேரையும் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் தியாகராஜன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . தகவலறிந்த காவல்துறையினர் படுகாயமடைந்த கிருஷ்ணன் என்பவரை மீட்டு பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தியாகராஜன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டபகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இட பிரச்சனை சம்மந்தமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் 4 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!