முதலியார்பட்டியில் ரூ 13 லட்சம் செலவில் காம்பவுண்ட் சுவர் கட்ட எம்பி ஞானதிரவியம் அடிக்கல் நாட்டினார்.

முதலியார்பட்டியில் ரூ 13 லட்சம் செலவில் காம்பவுண்ட் சுவர் கட்ட எம்பி ஞானதிரவியம் அடிக்கல் நாட்டினார்.
X
நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 13 லட்சம் செலவில் காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

முதலியார்பட்டியில் ரூ 13 லட்சம் செலவில் காம்பவுண்ட் சுவர் கட்ட எம்பி ஞானதிரவியம் அடிக்கல் நாட்டினார்.

தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம் முதலியார் பட்டியில் இடுகாட்டிற்கு காம்பவுண்டு சுவர் கட்ட வேண்டுமென திருநெல்வேலி எம்பி ஞானதிரவியத்திடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 13 லட்சம் செலவில் காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, எம்பி ஞானதிரவியம் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் கடையம் ஒன்றிய செயலாளர் குமார், அவைத்தலைவர் ஷாஜகான்,மாவட்ட மகளிரணி செயலாளர் செல்வி சங்குகிருஷ்ணன், கடையம் ஒன்றிய ஆணையாளர் முருகையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி