தமிழகத்தில் மோடி மஸ்தான் வேலை எடுபடாது : ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் மோடி மஸ்தான் வேலை எடுபடாது என்று தென்காசியில் தேர்தல் பிரசாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோயில் ஆகிய 5 சட்டமன்ற தொகுதியல்யிகளும் மதசார்பற்ற கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பாவூர்சத்திரத்தில் தேரதல் பரப்புரை மேற்க்கொண்டார். பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் பிரதமர் மோடி வழக்கம் போல பொய் பிரச்சாரத்தை செய்து விட்டுச் சென்றுள்ளார். அவர் என்ன பொய் பேசினாலும் தமிழகத்தில் மோடி மஸ்தான் வேலை எடுபடாது.

ஜெயலலிதாவை அரசியலில் இருந்து ஒழிக்க வேண்டும் என பேசியவர் பிரதமர் மோடி, தற்போது ஊழல் செய்து வரும் பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வம் ஆகிய இருவரையும் வைத்துக் கொண்டே பிரதமர் மோடி ஊழலை ஒழிப்போம் என பேசி வருகிறார்.

மேலும் பேசிய அவர், திரைப்படத்தில் வருவது போல ஆண்டவன் சொல்கிறான் அருணாச்சலம் செய்கிறான் என்பது போல ஸ்டாலின் சொல்கிறான் பழனிச்சாமி அதை செய்கிறார்.

இந்த பத்து வருட ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டு காலம் பின்னோக்கி சென்று விட்டது எனவே மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைத்து தன்னை முதல்வரக்கும் படி வாக்கு சேகரித்தார். கூட்டத்தில் முககவசம் அணியாதவர்களை பார்த்து

கொரோனா இரண்டாவது அலை வீச தொடங்கி உள்ளது எனவே உங்கள் வீட்டு பிள்ளையாக கேட்கிறேன் அனைவரும் முககவசம் அணியுங்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!