மிளா தாக்கி இளைஞர் உயிரிழப்பு: வனவிலங்குகளை கட்டுப்படுத்த கோரிக்கை
மருத்துவமனையில் குழுமியிருந்த உறவினர்கள்.
தென்காசி மாவட்டம், கடையம் பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி அடிவாரத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வன விலங்குகளான யானை, காட்டுப்பன்றி, மிளா, மான் போன்ற வன உயிரினங்கள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருவது வாடிக்கையாகி உள்ள சூழலில் தற்போது மனித உயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது.
கடையம் பெருமாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் தென்காசியில் புத்தகக்கடை நடத்தி வந்துள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு கடையை அடைத்து விட்டு கடையம் அருகே உள்ள போது மாதாபுரம் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது வந்த வாகனத்தின் மீது அவ்வழியாக வந்த மிளா பலமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பாலமுருகன் பலத்த காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து, மாதாபுரம் பகுதியில் அடிக்கடி மான், மிளா போன்ற வன விலங்குகள் சாலையை கடந்து செல்லும் போது இது போன்ற விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே வன விலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும், ஏழ்மை நிலையில் உள்ள பாலமுருகன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu