தென்காசி அருகே லோன் வாங்கி தருவதாக மோசடி: ஒருவர் கைது

கைது செய்யப்பட்ட கார்த்திகேயன்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்த செல்வம் என்பவர் முகநூல் பக்கத்தில் இருந்து அவருக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட நபர் ஒருவர், ரூ.4 லட்சம் கடன் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி கூகுள் பே மூலம் ரூ.40,000ஐ பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளார்.
இதுகுறித்து செல்வம் தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் அறிவுறுத்தலின் பேரில் காவல் ஆய்வாளர் திருமதி ஜோஸ்லின் அருள்செல்வி வழக்கு பதிவு செய்து எதிரியின் தொலைபேசி எண் மற்றும் வங்கி விபரங்களை வைத்து முகவரியை கண்டறிந்தனர். விசாரணையில் மோசடியில் ஈடுபட்டது இடையர்பாளையம் பாரதியார் தெருவைச் சேர்ந்த ராஜாமணி என்பவரின் மகன் கார்த்திகேயன் என்பது தெரிந்தது.
இந்நிலையில் தனிப்படை அமைத்து காவல் துறையினர் எதிரியை தேடி வந்த நிலையில் கோயம்புத்தூரில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு விரைந்த தனிப்படை சார்பு ஆய்வாளர் மாதவன், தலைமை காவலர் கோபி மற்றும் காவலர் முத்துக்குமார் ஆகியோர் எதிரியை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் கார்த்திகேயன் இது போல் பலரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆசை வார்த்தைகளை கூறி பணம் பெற்று ஏமாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திறம்பட செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu