ஆலங்குளம் அருகே மது போதையில் ஹோட்டல் மாஸ்டரை தாக்கிய வாலிபர் கைது

ஆலங்குளம் அருகே மது போதையில் ஹோட்டல் மாஸ்டரை தாக்கிய வாலிபர் கைது
X

ஆலங்குளம் அருகே ஹோட்டல் மாஸ்டரை போதை வாலிபர் தாக்கிய சம்பவம் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலங்குளம் அருகே ஹோட்டல் மாஸ்டரை போதை வாலிபர் தாக்கிய சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலங்குளம் அருகே ஹோட்டல் மாஸ்டரை பிரைடு ரைஸ் தர தாமதமானதால் போதை வாலிபர் செண்டரிங் கட்டையல் தலையில் தாக்கிய சம்பவம் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ள ஐந்தாம்கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் முருகன் அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஹோட்டல் மாஸ்டராக ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த தர்மர் மகன் ஆறுமுகம் பணியாற்றி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசிங் என்பவரது மகன் வினோத்குமார்( 23 ) மது அருந்திவிட்டு போதையில் ஹோட்டலுக்கு வந்து ஹோட்டல் மாஸ்டரிடம் தனக்கு பிரைட் ரைஸ் வழங்க வேண்டுமென தகாத வார்த்தைகளைக் கூறி கேட்டுள்ளார். அதற்கு மாஸ்டர் பணம் கொடுத்தால் உடனே பிரைட்ரைஸ் தருவதாக கூறியுள்ளார். தன்னிடம் பணம் கேட்பதா என கோபமடைந்த வினோத்குமார் மேலும் தகாத வார்த்தைகளால் கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது.

உடனடியாக கடை உரிமையாளர் அவரை எச்சரித்து அனுப்பி உள்ளார். கோபத்துடன் போதையில் வெளியில் சென்ற வினோத்குமார் சென்டரிங் கட்டையை எடுத்து வந்து ஹோட்டல் மாஸ்டர் ஆறுமுகத்தின் தலையில் பின்னால் நின்று பலமாக தாக்கியுள்ளார். கடையில் இருந்தவர்கள் அவரை பிடிப்பதற்குள் தப்பி ஓடி விட்டார். ஹோட்டல் மாஸ்டரை கட்டையால் தாக்கும் வீடியோ கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது தெரிய வந்தது. மேலும் மாஸ்டரை கட்டையால் தாக்கியதில் ஹோட்டலில் இருந்த பொருட்களும் சேதமடைந்தன.

தலையில் பலமாக அடிபட்டு காயமடைந்த ஆறுமுகம் கடையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர் முருகன் கடையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத் குமாரை கைது செய்தனர். ஹோட்டல் உரிமையாளரை தாக்கும் சிசிடிவி காட்சி வீடியோ தற்பொழுது தென்காசி மாவட்டத்தில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!