உள்ளாட்சி தேர்தல்: இருபிரிவினரிடையே மோதல் வாக்குப்பெட்டி சிறை பிடிப்பு

உள்ளாட்சி தேர்தல்: இருபிரிவினரிடையே மோதல் வாக்குப்பெட்டி சிறை பிடிப்பு
X

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியத்தில் சிறை பிடிக்கப்பட்ட வாக்குப் பெட்டிகளை விடுவிக்கக் கோரி போலீசார் பேச்சு வார்தையில் ஈடுபட்ட போது எடுத்தப்படம்.

தென்காசி உள்ளாட்சி தேர்தலில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு, வாக்குப் பெட்டிகள் சிறை பிடிக்கப்பட்டன. போலீசார் அதிரடியாக மீட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலங்குளம் ஒன்றியம் நாரணம்மாள்புரம் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் ஆ.மருதப்ப புரத்தைச் சேர்ந்த மணிமாறன் மனைவி செல்வி என்பவர் போட்டியிட்டார்.

இவர் ஆலங்குளம் தெற்கு ஒன்றியதிமுக செயலாளர் செல்லத்துரையின் மருமகள்.அவரை எதிர்த்து நாரணம்மாள்புரம் ஊரைச் சேர்ந்த துரைராஜ் என்பவரது மனைவி சண்முகத்தாய் என்பவர் போட்டியிட்டார்.

இந்நிலையில் 6 ஆம் தேதி மாலை இரண்டு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதில் இரண்டு தரப்பிலும் உள்ள பூத் ஏஜெண்டுகள் சிறை பிடித்து வைக்கப்பட்டனர். இதனால் ஆ.மருதப்பபுரம் மற்றும் நாரணம்மாள்புரம் ஆகிய இரண்டு கிராமங் களிலும் பதட்டம் ஏற்பட்டது.

இதனால் பஞ்சாயத்து தலைவி வேட்பாளர் செல்வியின் தரப்பினர் நாரணம்மாள்புரத்திற்கு இரண்டு கார்களில் திரண்டு வந்தனர். அவர்கள் வந்த இரண்டு கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.


இதுகுறித்து தகவலறிந்த செல்வியின் தரப்பினர் நாரணம்மாள்புரத்தைச் சேர்ந்த பூத் ஏஜெண்டுகள் மகேஷ்,சசிகுமார்,இசைக்கி துரை,சுதாகர்,துரைராஜ், முருகேசன் ஆகிய 6 பேரை சிறை பிடித்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நாரணம்மாள்புரத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் அங்கு பூத் ஏஜெண்டுகளாக செயல்பட்டவர்களை சிறைபிடித்தனர்.

இதனால் இரண்டு கிராமங்களிலும் பெரும் பதட்டம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு நெல் லை சரக டிஐஜி பிரவின் குமார் அபி நபு,தென்காசி மாவட்ட எஸ்பி கிருஷ்ண ராஜ்,இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்ட னர்.

இந்நிலையில் நாரணம்மாள்புரம் வேட்பாளர் சண்முகத்தாயின் கணவர் துரைராஜ் தலையில் தாக்கப்பட்டு காயம் அடைந்தார். இதனால் நாரணம்மாள்புரம் ஊர் பொதுமக்கள் திரண்டு அங்குள்ள வாக்கு பதிவு நடந்த சமுதாய நலக்கூடம் முன்பு திரண்டனர்.

வாக்கு சாவடியை பூட்டி உள்ளே இருந்த அலுவலர்கள் மற்றும் வாக்கு பெட்டியை சிறைப்பிடித்தனர்.இதனால் அந்த கிராமமே பெரும் பரபரப்புக்கு உள்ளானது.

இருதரப்பிலும் தென்காசி மாவட்ட எஸ்பி கிருஷ்ண ராஜ் பேச்சுவார்த்தை நடத்தி, பேச்சு வார்த்தையில் முடிவு எட்டாத நிலையில் அதிரடி படையுடன் நுழைந்து பூத் எண் 128,129,130 ஆகிய 3 பூத்களில் உள்ள வாக்கு பெட்டி மற்றும் அலுவலர்களை மீட்டனர். இரண்டு தரப்பிலும் பிடித்து வைக்கப்பட்ட பூத் ஏஜெண்ட்களை விடுவித் தனர்.

6 மணி நேர போராட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!