உள்ளாட்சித் தேர்தல்: இளைஞர்களின் வினாேத அறிவிப்பால் வேட்பாளர்கள் கலக்கம்

உள்ளாட்சித் தேர்தல்: இளைஞர்களின் வினாேத அறிவிப்பால் வேட்பாளர்கள் கலக்கம்
X

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு புதுப்பட்டி கிராமத்தில் இளைஞர்களால் செய்யப்பட்டுள்ள வினாேத அறிவிப்பு. 

உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் இளைஞர் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊர் புதுப்பட்டி. இந்த கிராமத்தில் சுமார் 5 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் இளைஞர் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுப்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவர் கவனத்திற்கு, தேர்தலில் செலவு செய்த பணத்தை ஊராட்சி மன்ற நிதியில் இருந்து எடுத்து விடலாம் என்று எண்ண வேண்டாம். இளைஞர்களாகிய நாங்கள் கிராமசபை கூட்டங்களில் வரவு செலவு கணக்குகளை கேட்போம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது உள்ளாட்சி தேர்தல் போட்டியிடுபவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture