சிவலார்குளத்தில் போலி பத்திரம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் 2 மாதத்திற்குள் மீட்பு

முருகம்மாளிடம் நிலப்பத்திரம் ஒப்படைக்கப்பட்ட காட்சி.
Fake Documents -தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவலார்குளம் பகுதியில் வசித்து வரும் முருகம்மாள். இவருக்கு சொந்தமான ரூபாய் 1,50,000 மதிப்புள்ள 1 1/2 சென்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த அழகம்மாள் மற்றும் முத்துக்குட்டி ஆகியோர் போலி ஆவணங்கள் தயார் செய்து தன்னிடம் இருந்து அபகரித்ததாக 10/05/2022 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் சந்திச்செல்வி துரிதமாக விசாரணை மேற்கொண்டு மேற்படி அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் முன்னிலையில் முருகம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டது. உரிய விசாரணை மேற்கொண்டு நிலத்தை மீட்டெடுத்த காவல்துறையினருக்கு முருகம்மாள் கண்ணீர் மல்க நன்றியினை தெரிவித்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu