தென்காசி: நில அபகரிப்பு தடுப்பு பிரிவினர் உதவியுடன் மீட்கப்பட்ட நிலம்

தென்காசி: நில அபகரிப்பு தடுப்பு பிரிவினர் உதவியுடன் மீட்கப்பட்ட நிலம்
X

மீட்கப்பட்ட நிலத்திற்கான ஆவணங்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் முன்னிலையில், உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தென்காசியில், போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம், நில அபகரிப்பு தடுப்பு பிரிவின் உதவியுடன் மீட்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு பிரிவில், கடந்த (17/07/2021) அன்று கோவில்பட்டியை சேர்ந்த சொர்ணவடிவு என்பவர், தனக்கு சொந்தமான இடம், கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டியில் உள்ளதாகவும், தனது இடத்தை தனது பெரியப்பா மகன் கணேசன் என்பவர், போலி ஆவணங்கள் கொண்டு அவருடையது என உரிமை கொண்டாடுவதாகவும் , தனது இடத்தை மீட்டுத்தருமாறும் புகார் கொடுத்தார்.

இதனை, துணைக்காவல் கண்காணிப்பாளர் தஆரோக்கியராஜ் தலைமையில் காவல் ஆய்வாளர் சாந்தி செல்வி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்டனர். பின்னர், இதனை, சொர்ணவடிவின் உடன்பிறந்த சகோதரன் கணேசன் என்பவரிடம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் முன்னிலையில் மீட்டு ஒப்படைக்கப்பட்டது. அபகரிக்கப்பட்ட நிலம் குறித்த வழக்கை, உரிய முறையில் விசாரித்து, துரித நடவடிக்கை எடுத்த, அபகரிப்பு தடுப்பு பிரிவில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அதிகாரியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil