ஐன்ஸ்டீன் பொறியல் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழா!

ஐன்ஸ்டீன் பொறியல் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழா!
X

பட விளக்கம்: நீட் தொடர்பான ஆங்கிலத்தில் உரையாற்றிய மாணவிகளை பாராட்டிய போது எடுத்த படம்

ஐன்ஸ்டீன் பொறியல் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது

ஆலங்குளம் அருகே அமைந்துள்ள ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் திமுக மருத்துவ அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது.

விழாவில் மருத்துவர் சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன், மருத்துவர் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி சோமு, கலைஞரின் மருத்துவர் மோகன் காமேசுவரன் என மருத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டு சிந்தனையாளர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மொய்தீன் கான், சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்த மருத்துவ அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

“Einstein English Club” மாணவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து, தொகுத்து வழங்கினர். அவர்களில் மூன்று மாணவிகள் "Achievements of Dravidian Model & Launching of Signature Moment Against Neet” தலைப்பில், ஆங்கிலத்தில் உரையாற்றினார். திமுக மருத்துவ அணி செயலாளர் மருத்துவர் எழிலன், NEET விளைவுகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்வாகவும், எளிமையாகவும் சமூக அக்கறையோடு பேசினார். இன்று மருத்துவப் படிப்புக்கு NEET, வரும் ஆண்டுகளில் பொறியியல், கலை - அறிவியல் மற்றும் சட்டப் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டத்தில் ஒன்றிய அரசின் NEP அறிக்கை உள்ளது. இதனால் உங்களைப் போன்ற கிராமத்து மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஆழமாக எடுத்துரைத்தார்.

திமுக மருத்துவ அணி தலைவர் மருத்துவர் கனிமொழி மருத்துவத்துறையில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையைப் பற்றித் தெளிவாக உரையாற்றினார்கள். தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது, உலக கவனத்தையும் ஈர்த்துள்ளது என்றார். நகரம் முதல் குக்கிராமம் வரை, ஏழை முதல் செல்வந்தர் வரை, மழலை முதல் முதியவர் வரை நமது மருத்துவக் கட்டமைப்பு மக்களை காக்கிறது என்பதைப் புள்ளி விவரங்களோடு புரியவைத்தார். அருமையாகப் பேசிய ஐன்ஸ்டீன் கல்லூரி மாணவிகளை வெகுவாகப் பாராட்டி, தொடர்ந்து இதுபோன்று செயலாற்ற வேண்டும் என மாணவிகளை வாழ்த்தினார்.

கலைஞரின் நேரடி மருத்துவரான திரு.மோகன் காமேசுவரன் உரையில் "செவித்திறன் குறைபாட்டால் கேட்கவும், பேசவும் முடியாத சிறுவர்களுக்கான சிறப்பு சிகிச்சையின் தேவையை தலைவர் கலைஞருக்கு எடுத்துரைத்த உடன் தமிழக அரசால் சிறப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது. இதனால் பயனடைந்த 30 சிறுவர்களுடன் அவர்தம் பெற்றோரையும் சந்தித்து உரையாடி மகிழ்ந்தார் கலைஞர். பிறகு அந்தச் சிறுவர்களுடன் புகைப்படம் எடுக்கும்போது உணர்வைக் கட்டுப்படுத்த இயலாமல் கலைஞரின் கருப்புக் கண்ணாடியைக் கடந்து கண்ணீர் வழிந்தது" என மருத்துவர் மோகன் காமேசுவரன் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்