கடையம் ராமநதி அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறப்பு

கடையம் ராமநதி அணையில் இருந்து பாசனத்திற்காக  இன்று தண்ணீர் திறப்பு
X

தென்காசி மாவட்டம் கடைய நல்லூர் ராமநதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையம் ராமநதி அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராமநதி அணை உள்ளது. இந்த அணையின் மூலம் கடையம்,பொட்டல்புதூர்,உட்பட 11 கிராமங்களில் 21 குளங்கள் நிரம்புகிறது.

5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் பிசான சாகுபடிக்காக ராமநதி அணையில் இருந்து 03.11.2021 முதல் 30.03.2022 வரை 148 நாட்களுக்கு வினாடிக்கு 60 கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் வரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப திறந்துவிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தலைமையில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மற்றும் தென்காசி மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் உள்ளிட்டோர் முன்னிலையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதில் தென்காசி எம்.எல்.ஏ. பழனி நாடார், பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture