கடையம் பகுதியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

கடையம் பகுதியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் இன்று தடுப்பூசி போட்டும் இடங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் கீழ்க்கண்ட இடங்களில் இன்று தடுப்பூசி போடப்படுகிறது.காலை 10 மணி முதல் பிற்பகல் 3மணி வரை தடுப்பூசி கீழ்க்கண்ட இடங்களில் போடப்படுகிறது கடையம் சத்திரம் பாரதி பெண்கள் உயர்நிலைப் பள்ளி வளாகம்,

பொட்டல்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், மற்றும் கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கோவிலூத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பாப்பாங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் வைத்து கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டு

(முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை)

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், பிடி தொழிலாளர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பணியாளர்களுக்கும், சுய உதவி குழு உறுப்பினர்கள்/கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும்போடப்பட உள்ளது

சுற்றுப்புற கிராமங்களில் உள்ள அனைவரும் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது வரும்போது

ஆதார் அடையாள அட்டையின் ஜெராக்ஸ் நகல் எடுத்து வரவும் முக கவசம் அணிந்து வரவும் சமூக இடைவெளியை பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது

இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதற்கு 84 நாட்கள் முடிந்திருக்க வேண்டும் இவ்வாறு வட்டார மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி