இராமநதி அணை, கடனா அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசாணை வெளியீடு
: ராம நதி அணையின் தோற்றம்.
தென்காசி மாவட்டம், தென்காசி, கடையம், குற்றாலம், செங்கோட்டை, ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்வதால் தென்காசி மாவட்டத்தில் உள்ள குண்டாறு, அடவி நைனார் கோவில் நீர்த்தேக்கம், கருப்பா நதி, ராம நதி, கடனாநதி என அனைத்து நீர் தேக்கங்களும் தனது முழு கொள்ளளவை எட்டி வருகின்றன.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விவசாய தெரிவிக்காக இந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்திலுள்ள இராமநதி அணை, கடனா அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் மற்றும் வட்டம், மேலக்கடையம் கிராமத்தில் உள்ள இராமநதி அணையிலிருந்து பாசனம் பெறக்கூடிய நிலங்களுக்கு 1432-ம் பசலி பிசான சாகுபடி செய்வதற்கு 12.11.2022 முதல் 31.03.2023 வரை 140 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 60க.அடி அளவுக்கு மிகாமல், பாசனபருவகாலத்தின் மொத்த தேவையான தண்ணீர் அளவான 823.92 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தென்காசி மாவட்டம் மற்றும் வட்டத்தில் 4943.51 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
தென்காசி மாவட்டம், தென்காசி வட்டம், சிவசைலம் கிராமத்தில் உள்ள கடனா அணையிலிருந்து பாசனம் பெறும் நிலங்களுக்கு பிசான சாகுபடிக்கு கடனா நீர்த்தேக்கத்திலிருந்து 12.11.2022 முதல் 31.03.2023 வரை 140 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 125 க.அடி அளவுக்கு மிகாமல், பாசன பருவகாலத்தின் மொத்த தேவையான தண்ணீர் அளவான 1653.87 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அம்பாசமுத்திரம், தென்காசி மற்றும் சேரன்மகாதேவி வட்டங்களில் 9923.22 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் மற்றும் மழையளவு தகவல்களை பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்:
கடனா:
உச்சநீர்மட்டம் : 85.00 அடி
நீர் இருப்பு : 68.00 அடி
கொள்ளளவு: 164.52 மி.க.அடி
நீர் வரத்து : 131.00 கன அடி
வெளியேற்றம் : 40.00 கன அடி
ராம நதி :
உச்ச நீர்மட்டம் : 84.00 அடி
நீர் இருப்பு : 69.75 அடி
கொள்ளளவு: 68.00 மி.க.அடி
நீர்வரத்து : 30.00 கன அடி
வெளியேற்றம் : 30.00 கன அடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72.00 அடி
நீர் இருப்பு : 51.18 அடி
கொள்ளளவு: 47.58 மி.க.அடி
நீர் வரத்து : 35.00 கன அடி
வெளியேற்றம் : 25.00 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
கொள்ளளவு: 18.43 மி.க.அடி
நீர் வரத்து: 30.00 கன அடி
வெளியேற்றம்: 30.00 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 81.50 அடி
கொள்ளளவு: 61.45 மி.க.அடி
நீர் வரத்து : 35.00 கன அடி
வெளியேற்றம்: 35.00 கன அடி
மழையளவு:
ஆய்குடி: (கடையநல்லூர்) 12.00 மி.மீ
செங்கோட்டை: 1.00 மி.மீ
சிவகிரி: 4.00 மி.மீ
தென்காசி: 6.00 மி.மீ
கடனா: 3.00 மி.மீ
ராம நதி: 4.00 மி.மீ
கருப்பா நதி: 56.00 மி.மீ
குண்டாறு: 2.20 மி.மீ
அடவிநயினார்: 4.00 மி.மீ
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu