புதிய ரக சிறுகிழங்கில் அதிக மகசூல்: தேசிய அளவில் விவசாயிக்கு பாராட்டு
தேசிய அளவில் பாராட்டு சான்றிதழ் பெற்ற 8 பேரில் ஒருவராக இடம் பிடித்த விவசாயி முகிலன்.
புதிய ரக சிறுகிழங்கு வகையில் அதிக மகசூல் பெற்ற விவசாயி - தேசிய அளவில் பாராட்டு சான்றிதழ் பெற்ற 8 பேரில் ஒருவராக இடம் பிடித்தவர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட பள்ளக்கால்புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள மத்திய கிழங்கு வகை பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் சார்பாக புதிய ரகமான சிறுகிழங்கு பயிரில் ஸ்ரீ தாரா என்ற அதிக மகசூல் தரும் நாற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது.
இந்த கிழங்கை அறுவடை செய்ததில் பள்ளக்கால்புதுக்குடி பகுதியை சேர்ந்த முகிலன் என்ற விவசாயி மற்ற சிறுகிழங்கு ரகங்களை காட்டிலும் 50 சதவீதம் மகசூல் கூடுதலாக பெற்றுள்ளார். அதன்படி தேசிய அளவில் இந்த ஸ்ரீ தாரா என்னும் புதிய வகை சிறுகிழங்கு நாற்று வாங்கி நட்டு அதிக மகசூல் எடுத்த 8 விவசாயிகளில் பள்ளக்கால்புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முகிலன் இடம் பிடித்துள்ளார். அவரை பாராட்டும் வகையில் விஞ்ஞானிகள் முன்னிலையில் தேசிய அளவில் அவருக்கு விருதும் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஸ்ரீதாரா என்ற புதிய வகை சிறுகிழங்கை நான் பயிர் செய்து சுமார் 50 % அதிக மகசூல் பெற்றேன். இந்த கிழங்கில் பூச்சி தொல்லைகள் இல்லை, இதனால் செலவு குறைந்து அதிக வருமானம் எனக்கு கிடைத்துள்ளது. இதனை பாராட்டி விஞ்ஞானிகள் முன்னிலையில் எனக்கு பாராட்டு சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் தற்போது மீண்டும் இந்த அதிகளவு வருமானம் தரக்கூடிய சிறுகிழங்கை பயிர் செய்துள்ளேன் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu