ஆலங்குளம் அருகே ஒரே நேரத்தில் 6 குட்டிகளை ஈன்ற அதிசய ஆடு

ஆலங்குளம் அருகே ஆ.மருதப்பபுரம் கிராமத்தில் விவசாயி சண்முகையா வீட்டில் வெள்ளாடு ஒன்று ஒரே நேரத்தில் 6 குட்டிகளை ஈன்றுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த ஆ.மருதப்பபுரம் கிராமத்தின் அரசமரப் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகையா (65) என்னும் விவசாயி தனது வீட்டில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 20க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்.
தான் வளர்த்து வந்த நாட்டு ரகத்தைச் சேர்ந்த வெள்ளாடு ஒன்று நிறைமாதமாக இருந்த நிலையில் திடீரென்று குட்டிகளை ஈன்ற ஆரம்பித்துள்ளது. அந்த குட்டியானது இதற்கு முன்பு வழக்கமாக மூன்று அல்லது நான்கு குட்டிகளை அதிகமாக ஈன்று வந்த நிலையில் தற்பொழுது 6 குட்டிகளை அடுத்து அடுத்து ஈன்றதனை கண்டு சண்முகையா அதிர்ச்சி அடைந்ௗதார்.
ஆறு குட்டிகளில் மூன்று ஆண் குட்டிகளும், மூன்று பெண் குட்டிகளும் ஈன்றுள்ளதாகவும் ஆறு குட்டிகளும் எவ்வித குறைபாடும் இன்றி நலமுடன் இருப்பதாகவும் தனது தாயிடம் நன்கு பால் அருந்துவதாகவும் சண்முகையா தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu