பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
X

பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.

பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் ராமநதி பாசனத்தில் மந்தியூர், ரவண சமுத்திரம், கோவிந்தப்பேரி உள்ளிட்ட கிராமங்களில் 1600 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தற்போது கார் மற்றும் பிசான சாகுபடிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அம்பை 16 என்ற நெல் ரகத்தை பயிரிட்டுள்ளனர். பயிர் நடவு செய்த சில நாட்களில் ஒரு விதமான பூஞ்சை நோய் தாக்கியது.

இந்த நோய்த் தாக்கத்திற்கு வேளாண் துறை சார்பில் சில பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த பரிந்துரைத்தனர். அதனை பயன்படுத்தியும் இந்த நோய் தாக்கம் குறையவில்லை. தொடர்ந்து நெற்கதிர்கள் பழுப்பு நிறமாக மாறி உள்ளது. இதனால் பயிர்கள் முழுவதுமாக கருகி கதிர்கள் இல்லாமல் உள்ளது.

இந்நிலையில் வேளாண்துறை சார்பில் பல மருந்துகளை பயன்படுத்தும் அதனை பயன்படுத்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. எனவே அரசு பாதித்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி