கடையம் : இலவச மருத்துவ முகாம் மாவட்ட செயலாளர் தொடங்கி வைத்தார்.

கடையம் : இலவச மருத்துவ முகாம் மாவட்ட செயலாளர் தொடங்கி வைத்தார்.
X

கடையத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் 

கடையம் ஜி ஆர் புரம் மகாகவி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இலவச மருத்துவ முகாமை மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்

தென்காசி சாந்தி பல்நோக்கு மருத்துவமனை மற்றும் கடையம் ஜி ஆர் புரம் மகாகவி மெட்ரிகுலேஷன் பள்ளி இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாமிற்கு தலைமை ஏற்று மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரி அவர்கள் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஊராட்சி மன்ற தலைவர்கள், கடையம் ஒன்றிய துணை பெருந்தலைவர் மகேஷ் மாயவன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் ஓணம் பீடி அதிபர் பாலகிருஷ்ணன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மருத்துவ அதிகாரிகள் தமிழரசன் அன்பரசன், கௌதமி தமிலரசன் ஆகியோர் கலந்துகொண்டு வருகை தந்த பொது மக்களுக்கு மருத்துவ சிகிச்சையும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!