ரவண சமுத்திரத்தில் இலவச பொது மருத்துவ முகாம்: 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ரவணசமுத்திரத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ரவணசமுத்திரம் ஊராட்சியில் திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள், ரவண சமுத்திரம் ஊராட்சி மன்றம் மற்றும் கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து பொது மக்களுக்கான இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
மருத்துவர்கள் முகமது முபாரக், ஆஜிஸ் மற்றும் சித்த மருத்துவர் ரத்னா தேவி ஆகியோர் கலந்துகொண்டு குழந்தைகள், முதியோர்கள் மற்றும் சித்த மருத்துவம் சார்ந்த மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை அளித்தனர். சுமார் 500க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
நிகழ்ச்சிக்கு ரவண சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முகமது உசேன் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராமலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கோமதி முகம்மது யஹ்யா,மொன்னா முகம்மது அப்துல் காதர் ஜமீலா காத்தூன் மற்றும் சமுதாயத் தலைவர்கள் பரமசிவம், ஆறுமுகம் மற்றும் ஊர் பொதுமக்கள் சட்டக்கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் சண்முகசுந்தரம், நாராயணி மற்றும் பேராசிரியர்கள் முத்துக்குமார் முத்துச்செல்வி ஆகியோர் ஒருங்கிணைத்து இருந்தனர் ஊராட்சி செயலாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu