கடையம் அருகே இலவச கண் பரிசோதனை முகாம்

கடையம் அருகே இலவச கண் பரிசோதனை முகாம்
X
கடையம் அருகே இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் நெல்லை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நிதி உதவியுடன் கோபாலசமுத்திரம் கிராம உதயம் மற்றும் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கடையம் இறையியல் கல்வி நிறுவன வளாகத்தில் வைத்து நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமிற்கு இளையவள் கல்வி நிறுவன இயக்குனர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். கிராம உதயம் நிறுவனத் தன்னார்வத் தொண்டர் கணேசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமி நாத் ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார் கடையம் காங்கிரஸ் துணைத் தலைவர் சாத்தா ஆகியோர் கலந்து கொண்டனர். நெல்லை அரவிந்த் கண் மருத்துவர் அவனி சோனி கண் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்தார். முகாம் ஏற்பாடுகளை அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் மாதவன் உட்பட கிராம உதயம் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story