கடையம் அருகே புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா

கடையம் அருகே புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா
X

புதிய ரேஷன் கடைக்கு  நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா 

இதனையடுத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 9.13 லட்சத்தில் புதிய பகுதிநேர ரேஷன் கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

கேளையாபிள்ளையூரில் ரூ 9.13 லட்சத்தில் புதிய ரேஷன் கடைக்கு திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் அடிக்கல் நாட்டினார் .

தென்காசி மாவட்டம் கடையம் அருகே சேர்வைகாரன்பட்டி ஊராட்சி கேளையாபிள்ளையூரில் பகுதி நேர ரேஷன் கடை கேட்டு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 9.13 லட்சத்தில் புதிய பகுதிநேர ரேஷன் கடை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு சேர்வைகாரன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

கடையம் வடக்கு ஒன்றிய செயலாளரும் துணை சேர்மனுமாகிய மகேஷ் மாயவன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். கபாடி மகேஷ் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மாரியப்பன், மாவட்ட கவுன்சிலர் மைதீன் பீவி ஜெய்லானி, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் சரஸ்வதி நாராயணன், ஒன்றிய துணைச் செயலாளர் கஸ்தூரி சுடலைமணி, பொருளாளர் அஜிஸ்,தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் கேபிஎன் சேட்,

ஒன்றிய கவுன்சிலர்கள் பாலகசெல்வி பாலமுருகன், ஆவுடைய கோமதி, ரம்யா ராம்குமார், சங்கர் ,அற்புதராஜ், முருகன், கருத்தபாண்டி, முத்தையா, ராஜபாண்டி, அழகேசன், ராமராஜ், ஜெயக்கொடி, ஏபிஎன் குணா, மகாராஜா, வக்கீல் காமாட்சி, வார்டு உறுப்பினர் சங்கர் ராம், செல்வராஜ், பொன்னுத்துரை, கோபி, மாடசாமி, கணேசன், பாலகுமார், மாரிசெல்வம், சுதிர் குமார், ,ஜெயகுமார், சமுத்திரபாண்டி, புறங்காட்டான்புலியூர் செல்வராஜ், தங்கராஜ், அரிச்சந்திரன், ஆசிரியா கருணாகரன், மணிகண்டன், ராஜேந்திரன், அருணாச்சலம், கருப்பாசாமி, பாலச்சந்திரன், கணபதி, பழவேசம், நடராஜன், கண்ணன், செல்லத்துரை,கந்தசாமி, மகேஷ், கோபால், மாரிசெல்வன், முருகேசன், நவீன் கிருஷ்ணன், மகேஷ்வரன், வெய்கை ஆனந்த், ரேவதி, முப்புமாதி, நித்தியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!