நூலகத்திற்கு ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள நூல்களை வழங்கிய முன்னாள் அமைச்சர்

கடையம் அருகே ரவன சமுத்திரம் நூலகத்திற்கு ரூ.10,000 மதிப்பிலான புத்தகங்களை வழங்கிய முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா
ரவணசமுத்திரம் நூலகத்திற்கு ரூ 10 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் முன்னாள் அமைச்சர் பூங்கோதை வழங்கினார்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் 70 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கடையம் அருகே ரவண சமுத்திரம் நூலகத்திற்கு ஆலடி அருணா அறக்கட்டளை சார்பில் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் முகமது உசேன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் பூங்கோதை , ஆலடி அருணா அறக்கட்டளை சார்பில் ரூ 10 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை நூலகத்திற்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமலக்ஷ்மி சங்கிலி பூதத்தார், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கோமதி, முகமது யக்யா, ஜமீலா, ஊராட்சி செயலாளர் மாரியப்பன், வக்கீல் சிவகுமார், பஞ்சு அருணாச்சலம், ஜெபராஜன், ராஜா, மீரான் மைதின், சாகுல் ஹமீது, மணி, நாகூர் மீரான், அகமது ஷா, ஷபீக், ஆழ்வார் குறிச்சி கோதர்ஷா, மசூது, காஜா, ஜெய்லானி, சுலைமான், இசக்கியப்பன், தளபதி பீர், சுடலை முத்து, சமுதாய தலைவர் பரமசிவன், கடையம் நூலகர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக நூலகர் நடராஜன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu