காட்டுப்பகுதியில் முயல் வேட்டையாடிய 8 பேர் கைது- 5 வாகனங்கள் பறிமுதல்

காட்டுப்பகுதியில் முயல் வேட்டையாடிய 8 பேர் கைது- 5 வாகனங்கள் பறிமுதல்
X

ஆலங்குளம் அருகே காட்டுப்பகுதியில் முயல் வேட்டையாடிய 8 பேர் அதிரடி கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே காட்டுப்பகுதியில் முயல் வேட்டையாடிய 8 பேர் கைது - 3 பைக்குகள்- 2 ஆட்டோக்கள் பறிமுதல்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கரும்புளியூத்து சிவலார்குளம் ஆகிய காட்டுபகுதியில் வேட்டை நாய்களுடன் சிலர் செல்வதாக ஆலங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீஸ் ஏட்டு பாலமுருகன், மாரிச்செல்வம், லிங்கராஜா ஆகியோர் திருநெல்வேலி சாலை சிவலார்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அவர் கூட்டாளிகளுடன் முயல்வேட்டை வந்தாக கூறியுள்ளார். அவர் கொடுத்த தகவலின்பேரில் அந்த பகுதியில் வேட்டைநாய்களுடன் பதுங்கியிருந்த தாழையூத்தை சேர்ந்த தடிவீரன் (21),தங்கம் (21), ராஜவல்லிபுரம் வலதி (20). சங்கர் நகர் இசக்கிபாண்டியன், துரை(29), மணக்காடு சுந்தர் (30), ஆனந்த் (32) சிவலார்குளம் பாண்டி (23) ஆகிய 8 பேர் சிக்கினர்.

சாக்குமூட்டையில் வேட்டையாடி முயல்கள் இருந்தது. இவர்கள் 9 வேட்டைநாய்கள், 3 பைக்குகள், 2 ஆட்டோக்களுடன் வந்திருந்தனர்.

இந்த நிலையில் ஆலங்குளம் போலீசார் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். ஆலங்குளம் வனச்சரக வனவர் குமார், சிவலார்குளம் வனக்காப்பாளர் டென்சிங். வேட்டை தடுப்பு காவலர் ஈசாக் பிரபு ஆகியோரிடம் வேட்டைக்கு வந்தவர்கள், வேட்டைநாய்கள், மற்றும் வாகனங்களை ஒப்படைத்தனர். பிடிபட்ட 8 பேரும் வேட்டைநாய்களுடன் கூடுதல் விசாரணைக்காக நெல்லை வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். வேட்டை நாய்கள்- வாகனங்களுடன் வேட்டைக்கு வந்தவர்கள் பிடிபட்ட சம்பவம் ஆலங்குளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!