மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வேகமாக பரவி வரும் தீ!

களக்காடு முண்டந்துறை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகின்றது.

வனப்பகுதியில் மின்னல் தாக்கியதில் பரவிய காட்டுத் தீ. பலத்தக் காற்று வீசுவதால் வேகமாக பரவி வருகிறது

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் கடையம் வனச்சராக பகுதிக்கு உட்பட்ட வனப் பகுதியில் மின்னல் தாக்கியதில் கடும் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து பலத்தக் காற்று வீசி வருவதால் வேகமாக தீ பரவி வருகிறது.


களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கூட்டம் கடையம் வனத்துறை பகுதிக்கு உட்பட்ட ஆம்பூர் பீட் வனப்பகுதியில் மின்னல் தாக்கியது.இதில் காய்ந்த சருகுகளில் தீப்பிடித்து வேகமாக பரவியது.


மேலும் வனப் பகுதியில் பலத்தக் காற்று வீசுவதால் தீ வேகமாக பரவியது. தகவல் அறிந்ததும் கடையம் வனச்சரக வனவர்கள், வனக்காப்பாளர்கள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் தீயை அணைப்பதற்கு சென்றுள்ளனர். இரவு நேரமாகிவிட்டதாலும், தீப்பிடித்தப் பகுதி மிக உயரத்தில் இருப்பதாலும் தீயை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!