மரங்களை வெட்டியவர்கள் மீது அபராதம் விதித்து வனத்துறை அதிரடி நடவடிக்கை

மரங்களை வெட்டியவர்கள் மீது அபராதம் விதித்து வனத்துறை அதிரடி நடவடிக்கை
X

பைல் படம்.

களக்காடு அருகே மரங்களை வெட்டியவர்கள் மீது அபராதம் விதித்து வனத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உட்பட்ட கிராம பகுதியில் தனியார் விளைநிலங்களில் தேக்கு மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து கடந்த 20ம் தேதி இரவு கடையம் வனச்சரக தனி குழுவினருடன் இரவணசமுத்திரம் கடையம் சாலையில் வாகனம் ஒன்றை சோதனை செய்தனர். இதில் கருவேல மற்றும் பல ஜாதி மரங்கள் இருந்தது கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் சில இடங்களில் மரம் வெட்டியவர்களை கண்டறிந்தும் வாகன சோதனையில் ஈடுபட்டும் 8000, 5000 ,15000,என வெவ்வேறு இடங்களில் மூன்று நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது கோவிந்தபேரி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் உரிய அனுமதி இன்றி வெட்டப்பட்டிருந்த தேக்கு மர வெட்டு மோட்டுகளை உதவி வனப்பாதுகாவலர், கோவிந்தபேரி பீட் வனக்காப்பாளர் மற்றும் தனிக்குழுவினர் ஸ்தல தணிக்கை செய்து கண்டறிந்து அனுமதியில்லாமல் தேக்கு மரங்களை வெட்டிய வகைக்கு வழக்கு பதிவு செய்து ரூ 25 ஆயிரம் துணை இயக்குனர் உத்தரவின்படி அபராதம் விதிக்கப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!