குன்னூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி

குன்னூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி
X

குன்னூர் சாலை விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் நிதி உதவியை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வழங்கினார்.

குன்னூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அமைச்சர் கேகேஎஸ்ஆர் ராமச்சந்திரன் நிதி உதவி வழங்கினார்.

குன்னூர் மலைப்பாதையில் ஏற்பட்ட சுற்றுலா பேருந்து விபத்தில் பலியான தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வழங்கினார்.

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கடந்த 30ம் தேதி சுற்றுலா சென்று ஊர் திரும்பியபோது நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் தென்காசி, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் அவர்களை மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.

அதன்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன், கோட்டாட்சியர் லாவண்யாஆகியோர் கடையம் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் வைத்து 9 பேரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்ந்து தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு பேருக்கு தலா 2 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.மேலும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, திமுக ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!