/* */

பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானை: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

சில்லரைபுரவு ஊராட்சி பகுதியில் நெற்பயிர்கள் மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்திய யானையை வனப்பகுதியில் விரட்ட விவசாயிகள் கோரிக்கை

HIGHLIGHTS

பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானை: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
X

காட்டுயானை சேதப்படுத்திய நெற்பயிர்கள்

தென்காசி மாவட்டம் சில்லரைபுரவு ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தையொட்டி 800க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதில் மா, தென்னை, வாழை, நெல் உட்பட்ட விவசாயம் அதிக அளவில் பயிரிடப்பட்டும் வருகிறது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதி என்பதால் வனவிலங்குகளின் அட்டகாசத்தால் விவசாயிகள் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருவது வாடிக்கையாகி உள்ளது. அந்த வகையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சில்லரைபுரவு ஊராட்ச்சிக்கு உட்பட்ட திரவியம் நகர் பகுதியில் ஒற்றைக் கொம்பு வைத்த காட்டு யானை ஒன்று விவசாயப் பகுதிகளில் புகுந்து நெல், தென்னை, வாழை போன்ற பகுதிகளை நாசம் செய்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். தற்போது நெல் அறுவடை செய்யும் நேரத்தில் ஒற்றைக்கொம்பு காட்டு யானை நெற்பயிர்கள் சேதப்படுத்தி உள்ளது. மேலும் தென்னை, வாழை மரங்களை அடியோடு பிடுங்கி எறிந்து உள்ளது. இதனால் பெரும் அளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அறுவடை காலம் என்பதால் விவசாயிகள் அச்சத்துடன் இரவு நேரத்தில் நெற்பயிர்களுக்கு காவல் காக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே வனத்துறையினர் யானையை காட்டு உட்பகுதியில் விரட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதப்படுத்திய நெற்பயிர்கள், தென்னை மரங்களை மாவட்ட நிர்வாகம் வாயிலாக கணக்கிட்டு நிவாரண உதவிகளை வழங்க தமிழக அரசு வழங்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 26 Feb 2022 3:42 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  2. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  4. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  5. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  6. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  7. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  8. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  10. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு