சிசிடிவி கேமரா உதவியால் சிக்கிய பிரபல திருடன்: ஆலங்குளம் தனிப்படையினர் அதிரடி

சிசிடிவி கேமரா உதவியால் சிக்கிய பிரபல திருடன்: ஆலங்குளம் தனிப்படையினர் அதிரடி
X

சிசிடிவி கேமராவால் சிக்கிய பிரபல திருடன் முருகன்@ நூர்முகமது.

சுரண்டையில் CCTV கேமரா உதவியுடன் பிரபல திருடனை ஆலங்குளம் தனிப்படையினர் கைது செய்தனர்.

பிரபல திருடனை 100 க்கும் மேற்பட்ட CCTV கேமரா உதவியுடன் கைது செய்த ஆலங்குளம் தனிப்படையினர்

தென்காசி மாவட்டம், சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 08.02.2022 அன்று ஜெயகணேஷ் (32) என்பவர் வங்கியிலிருந்து பணத்தை எடுத்து தனது இருசக்கர வாகனத்தின் சீட்டின் கீழே பணத்தை வைத்து விட்டு மீண்டும் வந்து பார்த்த போது இருசக்கர வாகனத்தின் சீட்டை உடைத்து மர்ம நபர் 1,29,000 ரூபாய் பணத்தை திருடி சென்றதாக சுரண்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆலங்குளம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பொன்னரசு ஆகியோரின் உத்தரவின் பேரில் தலைமைக் காவலர்கள் சமுத்திரக்கனி, குமரேச சீனிவாசன், முதல்நிலைக் காவலர் சௌந்திர பாண்டியன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் 100 க்கும் மேற்பட்ட CCTV கேமிரா பதிவுகள், மற்றும் சைபர் கிரைம் காவலர்கள் ஜேசு, மனோஜ் ஆகியோரின் உதவியுடன் குற்றவாளியின் பல்வேறு தொடர்பு எண்களை வைத்து இருப்பிடம் போன்றவற்றை அறிந்தும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் திருட்டில் ஈடுபட்ட சென்னை தியாகராய நகரை சேர்ந்த தற்போது சங்கரன்கோவிலில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவரின் மகன் முருகன்@ நூர்முகமது (37) என்ற நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து பணம் ரூபாய் 95,000 பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி நபர் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களிடமிருந்து திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பதும் கடந்த காலங்களில் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் தமிழகம் முழுவதும் அவர்மீது சுமார் 25 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்