ஆலங்குளம் அருகே மதுபோதையில் மிரட்டல் விடுத்த போதை ஆசாமிகளால் பரபரப்பு

ஆலங்குளம் அருகே மதுபோதையில் மிரட்டல் விடுத்த போதை ஆசாமிகளால் பரபரப்பு
X

ஆலங்குளம் அருகே நேற்று மதுபோதையில் கையில் ஆயுதங்களுடன் நுழைந்த நபர்கள் அங்கு உள்ளவர்களை மிரட்டியுள்ளனர்.

ஆலங்குளம் அருகே நேற்று மதுபோதையில் கையில் ஆயுதங்களுடன் நுழைந்த நபர்கள் அங்கு உள்ளவர்களை மிரட்டியுள்ளனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது குத்தபாஞ்சான் குளம். இங்கு நேற்று மதுபோதையில் கையில் ஆயுதங்களுடன் நுழைந்த மூன்று நபர்கள் அங்கு உள்ளவர்களை மிரட்டியுள்ளனர். இதனை பெண் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

போதை ஆசாமிகள் அந்தப் பெண்ணிடம் சண்டையிடவே ஊரில் உள்ள இளைஞர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து போதை ஆசாமிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கடையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!