கண்ணைக் கட்டிய நிலையில் ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டதால் பரபரப்பு

கண்ணைக் கட்டிய நிலையில்  ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டதால் பரபரப்பு
X

கண்ணை கட்டிக் கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள். 

கண்ணை கட்டிய நிலையில் பேரறிவாளன் விடுதலை செய்ததை கண்டிக்கிறோம் என்று கோஷமிட்டபடி யூனியன் அலுவலக வளாகத்தில் நுழைந்ததால் பரபரப்பு.

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் இன்று நடைபெற்றது. பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சி இன்று போராட்டம் அறிவித்த நிலையில், இன்று கடையத்தில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தெற்கு கடையம் காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார் ராஜீவ் காந்தி படத்துடன் கண்ணை கட்டிய நிலையில் பேரறிவாளன் விடுதலை செய்ததை கண்டிக்கிறோம் என்று கோஷமிட்டபடி யூனியன் அலுவலக வளாகத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோஷமிட்டபடி நுழைந்த அவர் ஒன்றிய கவுன்சிலர்களின் இருக்கையில் ராஜீவ் காந்தியின் படத்தை வைத்து மலர் அஞ்சலி செலுத்தினார். அப்போது அப்போது துணைச் சேர்மன் மகேஷ் மாயவன் தலைவர்கள் படத்தை மன்ற கூட்டத்தில் டேபிளில் வைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்

முன்னாள் பிரதமர் படத்தை வைப்பேன் என்று மாரி குமார் வாக்குவாதம் செய்ய மன்றத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டது .கடையம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளரும் 13 வார்டு கவுன்சிலருமான ஜெயக்குமார் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும், தலைவர்களையும் மதிக்கிறோம். மன்ற கூட்டத்தில் தலைவர்கள் படத்தை வைப்பது மரபு அல்ல என்று எடுத்துக் கூறினார். பின்பு காங்கிரஸ் கவுன்சிலர் மாரி குமார் படத்தை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!