கடையம் ராமநதி அணையில் இருந்து உபரிநீர் திறப்பு
ராமநதி அணை.
தென்காசி மாவட்டம், கடையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உச்ச நீர்மட்டம் 84 அடி கொண்ட ராமநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் 5 ஆயிரம் ஏக்கர்க்கும் மேல் விவசாய நிலங்கள் 33 - க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.
இந்தநிலையில் தற்போது வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி பகுதிகளில் கன மழைக்கான ரெட்அலர்ட் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் கடையம் 84 ராமநிதி அணை அதன் முழு கொள்ளளவை எட்டும் தருவாயிலில் உள்ளது.
தற்போது அணையின் நீர்மட்டம் 82 அடியை எட்டியுள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரக்கூடிய 110 கன அடி நீர் முழுவதுமாக உபரிநீராக ஆற்று மதகுகள் மூலமாக 60 கன அடி நீரும், முக்கிய மதகுகள் வழியாக 50 கன நீரும் திறந்துவிடப்பட்டு உள்ளது.
எனவே பொதுமக்கள் யாரும் ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்...
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu