கடையம் அருகே விளை நிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்

கடையம் அருகே விளை நிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
X

தாேரணமலை பகுதியில் யானைகளால் சேதமடைந்த வாழை மரங்கள்.

தோரணமலை பகுதியில் விளை நிலங்களுக்குள் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதாக விவசாயிகள் குற்றச்சாட்டு.

தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்திற் குட்பட்ட தோரணமலை வடபுறம் உள்ள பகுதியில் விவசாய விளை நிலங்களுக்குள் யானைகள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தியதாக விவசாயிகள் குற்றச்சாட்டு.

நேற்று இரவு கோபாலகிருஷ்ணன் என்பவருடைய தோட்டத்தில் புகுந்த யானைகள் வாழை மற்றும் தென்னை மரங்களையும் சேதப்படுத்தி உள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியே வராத வண்ணம் மின் வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தும் மின் லேலிகள் முறையான பராமரிப்பு இல்லாததால் மின் வேலிகள் செயல்படாததால் தான் யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களையும் மரங்களையும் சேதப்படுத்தியதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

நேற்றிரவு கோபால கிருஸ்ணன் என்பவருடைய தோட்டத்தில் புகுந்த யானைகள் 10க்கும் மேற்பட்ட வாழைகள் மற்றும் இரண்டு கூந்தல் பனை மரங்கள் ஒரு மாமரம் போன்றவற்றை முறித்து சென்றுள்ளது .மாணிக்கவாசகம் மற்றும் பாலன் ஆகியோருடைய வயல்களில் இறங்கிய யானைகள் நெற்பயிர்களையும் சேதப்படுத்தி உள்ளது. வனத்துறை அதிகாரிகள் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டும் மின் வேலிகளை சரி செய்தும் விளை நிலங்களுக்குள் யானை, பன்றி, மிளா போன்ற வனவிலங்குகள் வராத வண்ணம் பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
future of ai in retail