கடையம் அருகே மண்ணுளி பாம்பை பிடித்து விற்க முயற்சித்தவர்களுக்கு அபராதம்
தென்காசி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கடையம் வனச்சரகத்திகுட்பட்ட ராஜாங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த இசேந்திரகுமார் மற்றும் ராமர் இருவரும் வன உயிரினமான மண்ணுளி பாம்பை பிடித்து விற்க முயற்சி செய்வதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கடையம் வனச்சரக உதவி வனப்பாதுகாவலர் ராதை அதிரடி நடவடிக்கையால் கையும் களவுமாக பிடிபட்டனர்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் உத்தரவின் பேரில் அவர்களுக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வன உயிரினங்களை பிடிப்பதும் வீட்டில் வளர்ப்பதும் விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றமாகும். கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் .வன உயிரினங்கள் விற்பனை குறித்த தகவல்களை கடையம் வனச்சரக உதவி வனப்பாதுகாவலர் ராதைக்கு +91 94871 21055 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu