அடிபட்டு சாலையில் இறந்து கிடந்த நாய்: அப்புறப்படுத்திய பஞ்சாயத்து தலைவர்

அடிபட்டு சாலையில் இறந்து கிடந்த நாய்: அப்புறப்படுத்திய பஞ்சாயத்து தலைவர்
X

சாலையில் இறந்து கிடந்த நாயை அப்புறப்படுத்திய பஞ்சாயத்து தலைவர்.

அடிபட்டு சாலையில் இறந்து கிடந்த நாயை துப்புரவு பணியாளர்கள் வராததால் பஞ்சாயத்து தலைவரே அப்புறப்படுத்தினார்.

தென்காசி மாவட்டம், கடையம் அம்பை நெடுஞ்சாலையில் கீழக்கடையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் சாலையில் வாகனம் மோதி நாய் ஒன்று இறந்து கிடந்தது.

இந்த நிலையில் யாரும் கண்டுகொள்ளாததால் கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநானுக்கு தகவல் கிடைத்தது. காலை நேரம் என்பதால் துப்புரவு தொழிலாளர்கள் பணிக்கு வராத நிலையில் யாரையும் எதிர்பாராமல் தானே சாலையில் இறங்கி நாயை இழுத்து ஓரமாக அப்புறப்படுத்தினார்.

பின்னர் பஞ்சாயத்து குப்பை வாகனத்தை வரவைத்து நாய் பாதுகாப்பாக புதைக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு கீழக் கடையம் பஞ்சாயத் தலைவர் பூமிநாத் உதாரணமாக திகழ்ந்து வருகிறார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!