உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி தென்காசியில் சித்த மருந்து வழங்கல்

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி தென்காசியில் சித்த மருந்து வழங்கல்
X

பனையேறிபட்டி கிராமத்தில் மாற்று திறனாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சித்த மருந்துகள் வழங்கப்பட்டது.

மாற்று திறனாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு சித்த மருந்துகள் வழங்கப்பட்டது

உலக மாற்று திறனாளிகள் தினத்தில், மாற்று திறனாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு சித்த மருத்துவ பிரிவு சார்பாக மருந்துகள் வழங்கப்பட்டது.

இன்று உலகம் முழுதும் மாற்றுத்திறனாளிகள் தின விழா கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் அவர்களை பாதுகாக்கும் பொருட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள அரியப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷா அவர்களின் வழிகாட்டுதலின்படி அரியப்பபுரம் சித்த மருத்துவ பிரிவு உதவி மருத்துவ அலுவலர் தமிழ் முதல்வி, மருத்துவமனை பணியாளர் ஐயம்மாள் ஆகியோர் வெள்ளை பனையேறிபட்டி கிராமத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு சித்த மருந்துகளை வழங்கினர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு அமுக்கரா சூரணம், ஏலாதி மாத்திரை, ஆடாதோடை மணப்பாகு, நிலவேம்புக் குடிநீர் சூரணம் வழங்கப்பட்டது.

Tags

Next Story