வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு: தம்பியை வெட்டிக் காென்ற அண்ணன் சரண்

வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு: தம்பியை வெட்டிக் காென்ற அண்ணன் சரண்
X

பைல் படம்

ஆலங்குளம் அருகே உள்ள மயிலப்பபுரத்தில் வயலில் தண்ணீர் பாய்ச்சும் தகராறில் தம்பியை வெட்டி கொலை செய்த அண்ணன் கைது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மயிலப்பபுரத்தில் வயலில் தண்ணீர் பாய்ச்சுவதில் அண்ணன், தம்பி சண்டையில் தம்பி மண்வெட்டியால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மயிலப்பபுரம் கிராமத்தில் சேகர் (எ) கணேசன் (வயது 55). இவரது அண்ணன் அருணாச்சலம் (வயது 59) இருவருக்கும் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டதில் சேகரை அருணாசலம் கையில் வைத்துள்ள மண்வெட்டியால் தலையில் வெட்டி சகதியில் மூழ்க வைத்து கொன்று விட்டு கடையம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையம் போலீசார் சேகர் (எ) கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடன்பிறந்த தம்பியை அண்ணனே கொலை செய்த சம்பவம் மயிலப்பபுரம் பகுதியில் மிகுந்த சோகத்திற்கு உள்ளாக்கியது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி