கடையத்தில் நூலக கட்டட கட்டுமான பணிகளை நூலகத் துறை இயக்குனர் ஆய்வு

புதிய நூலக கட்டட கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்த நூலகத் துறை இயக்குனர்
தென்காசி மாவட்டம் கடையத்தில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாரதியாருக்கும் செல்லம்மாளுக்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என்பது கடையம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த தொண்டு நிறுவனமான சேவாலயா மூலமாக சிலை தயார் செய்யப்பட்டது. சிலை தயாராகி ஒரு வருட காலம் கடந்தும் சரியான இடம் கிடைக்காத சூழ்நிலையில் பாரதியார் பெயரில் இருந்த நூலகத்தில் நிறுவுவது என முடிவு செய்யப்பட்டது.
நூலக கட்டிடம் மிகவும் பழுதடைந்து இருந்ததால் புதிதாக நூலக கட்டிடமும் பாரதி மையமும் கட்டுவதற்கு ரூபாய் 3 கோடி செலவில் சேவாலயா தொண்டு நிறுவனம் முடிவு செய்தது.
கடந்த ஜனவரி மாதம் சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டப்பட்டு பாரதி மையம் மற்றும் நூலகத்தின் உடைய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணி துவங்கி வைக்கப்பட்டது.
மிக துரிதமாக அந்த கட்டிட பணிகள் நடைபெற்று வரும் இந்த சூழ்நிலையில் சேவாலயா சார்பாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பாரதியார் நினைவு மண்டபம் மற்றும் நூலக கட்டுமான பணிகளை மாநில நூலகத் துறை இயக்குனர் இளம்பகவத் ஐ ஏ எஸ் ஆய்வு செய்தார். இதில் மாவட்ட நூலகர் லெ. மீனாட்சி சுந்தரம், கடையம் நூலகர் மா. மீனாட்சி சுந்தரம், முதன்மை கல்வி அலுவலர் கபீர் ,உதவி தொடக்கக் கல்வி அலுவலர் குருசாமி, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கல்யாணி சிவகாமிநாதன், ஆசிரியர் கோபால் ஆகியோர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu