கடையம் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கடையம் பகுதியில்  டெங்கு  தடுப்பு நடவடிக்கைகள்  தீவிரம்
X

டெங்கு பரவி வரும் பகுதிகளில் சுகாதார துறையினர் ஆய்வு

கடையம் வட்டாரத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடையநல்லூர் பகுதியில் ஒரு விதமான மர்ம காய்ச்சல் பரவி வந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்ட மருத்துவக் குழுவினர் அந்தக் காய்ச்சல் டெங்கு காய்ச்சல் என்பதை கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இந்த காய்ச்சல் பரவத் தொடங்கியது.

இதனை தடுக்க சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு டெங்கு காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் அவ்வப்போது பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

மழைக்காலங்களில் தேங்கும் நீரில் கொசுக்கள் மூலம் இந்த காய்ச்சல் பரவுகிறது. இதனை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொசுக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு சில இடங்களில் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தாலும், பல இடங்களில் ஒத்துழைப்பு தருவதில்லை. இதனால் கொசுக்களை ஒழிப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. மேலும் சாலையில் தேங்கும் நீரிலும் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தி ஆவதால் காய்ச்சல் வேகமாக பரவுகிறது.


தற்போது மழை காலம் என்பதால் பல்வேறு நோய் தொற்றுகள் பரவி வருகிறது. மீண்டும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே புலவனூர் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் பரவி நிலையில் சுகாதாரத் துறையினர் சோதனை செய்து பார்த்ததில் புலவனுரை சார்ந்த சிறுமிகள் ஹெப்சிபா மற்றும் லக்சயா என இருவருக்கு டெங்கு அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் ஒருவர் வீடு திரும்பியுள்ளார்

மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பழனி சங்கர் அறிவுறுத்தலின்படி வட்டார மருத்துவ நல அலுவலர் பழனி குமார் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன் ஆகியோர் தலைமையில் சுகாதார பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.


டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் இருக்க குளோரின் கலந்த குடிநீர் மற்றும் கொசுக்கான புகை மருந்து அடித்தல் ஆங்காங்கே தேங்கி இருக்கும் நீர் நிலைகளை அகற்றுதல் மற்றும் மக்களுக்கான சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு டெங்கு பரவா வண்ணம் சுகாதார பணியாளர்கள் தீவிர பணியாற்றி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture