அதிமுக ஆட்சியின் ஊழலை மறைக்கவே ஆர்ப்பாட்டங்கள் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

அதிமுக ஆட்சியின் ஊழலை மறைக்கவே  ஆர்ப்பாட்டங்கள் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
X

கடையம் அருகேயுள்ள திருமலையப்பபுரத்தில் உறுப்பினர் சேர்க்கையை பார்வையிட வந்த மாநில பொது செயலாளர் முஹம்மது அபூபக்கர் பத்திரிக்கையாளரை சந்தித்தார்.

அதிமுக ஆட்சியின் ஊழலை மறைக்கவே திமுக ஆட்சியை குறைகூறி ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை 52 மாவட்டங்களில் நடைபெறுகிறது. அதனை மாநில நிர்வாகிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உறுப்பினர் சேர்க்கை துரிதப்படுத்தி வருகின்றனர்.

அதன்படி இன்று தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள திருமலையப்பபுரத்தில் உறுப்பினர் சேர்க்கையை பார்வையிட வந்த மாநில பொது செயலாளர் முஹம்மது அபூபக்கர் பத்திரிக்கையாளரை சந்தித்தார்.

அப்போது அவர், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்த ஒரு சாதனையும் செய்யாமல் ஊழல் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்கு சிறப்பாக செயல்பட்டுவரும் திமுக அரசை குறை கூறி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தொழிற்சாலைகளை நிறுவுவதிலும் திமுக அரசு தொடர்ந்து தமிழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்குவதற்கு மிகச் சிறந்த முதல்வராக தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்பதை பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மத்தியில் ஆளுகின்ற பாரதிய ஜனதா ஆட்சி பல்வேறு சட்டங்களை திணித்து, சமூகத்தினரிடையே கலாச்சார தனித்தன்மை, சட்டங்களை எல்லாம் மாற்றக்கூடிய முயற்சிகளை கொண்டு வருகின்றனர். அதற்கு உதாரணமாக பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்திய அறிவிப்பு கடும் கண்டனத்துக்குரியது என்றும், மக்களவை மற்றும் மாநிலங்களவை யில் விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அதற்கு விவசாயிகள் மீது கொண்டுவரப்பட்ட சட்டங்கள் ஒரு ஆண்டுக்கு பிறகு திரும்ப பெறபட்டது என்றும், இந்திய நாட்டின் வளர்ச்சி என்பது பெருமைப்படக்கூடிய அளவிற்கு இல்லை. மத்தியிலே ஒரு மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி அமைய காங்கிரசும் திமுகவும் இணைந்து சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்தார்.

பேட்டியின்போது மாநில தலைமை கழக பேச்சாளர் முகமது அலி, மாவட்ட அமைப்புச் செயலாளர் அப்துல் காதர், ஆலங்குளம் தொகுதி அமைப்பாளர் எகியா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!