பொட்டல் புதூரில் வளர்ப்பு யானை வயது முதிர்வு காரணமாக உயிரிழப்பு

உயிரிழந்த யானை.
தென்காசி மாவட்டம் பொட்டல் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செய்யது மசூது திவான் . இவர் நிர்மலா என்ற யானையை கடந்த 25 ஆண்டுகளாக வளர்த்து வந்தார். இந்த யானையை கோவில் நிகழ்ச்சிகள் திருமண நிகழ்ச்சிகளில் வாடகைக்கு பயன்படுத்தி வந்தார். இந்த யானைக்கு வயது 65 ஆகிறது.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக நிர்மலா யானைக்கு உடல்நிலை சரியில்லாமல் காணப்பட்டது .இதனால் உணவு உட்கொள்ள முடியாமல் தவித்தது. தொடர்ந்து வயது மூப்பின் காரணமாக வும் உணவு உட்கொள்ள முடியாமலும் இன்று காலை நிர்மலா யானை பரிதாபமாக உயிரிழந்தது.
தகவலறிந்த கடையம் உதவி வனப்பாதுகாவலர் ராதை சம்பவ இடத்திற்கு சென்று யானையை பார்வையிட்டார். தொடர்ந்து வனத்துறை வன உயிரின கால்நடை மருத்துவர் மனோகரன் இறந்த யானையை உடற்கூறு ஆய்வு செய்தார். தொடர்ந்து யானையின் உடல் பொட்டல்புதூர் மைய வளாகத்தில் புதைக்கப்படும் என தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu