தென்காசி-கொரோனா தடுப்புநடவடிக்கை-கண்டுகொள்ளாத திருமண வீட்டிற்கு அபராதம்

தென்காசி-கொரோனா தடுப்புநடவடிக்கை-கண்டுகொள்ளாத திருமண வீட்டிற்கு அபராதம்
X
தென்காசி மாவட்டத்தில் பந்தல் அமைத்து திருமண விழாவில் விதிமீறல் கொரோனா தடுப்பு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டம்,, சுரண்டை பகுதிகளில் வீகேபுதூர் தாசில்தார் வெங்கடேஷ், ஆர்ஐ மாரியப்பன் ஆகியோர் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணித்து வந்தனர் அப்போது பங்களாச்சுரண்டையிலிருந்து தாயார் தோப்பு செல்லும் வழியில் தனியே பந்தல் அமைத்து திருமண விழா நடைபெற்றது.

திருமண விழா நிகழ்விடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்த போது கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முககவசம் சமூக இடைவெளியை பின்பற்றாதது கண்டறியப்பட்டு ரூ.5000/-அபராதம் விதித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.



Tags

Next Story
future of ai in retail