பிரபல ஜவுளி நிறுவனங்களின் ஸ்டிக்கர் ஒட்டி போலி வியாபாரம்: தந்தை, மகன் கைது

லங்குளம் அருகே முன்னணி ரெடிமேட் ஜவுளி நிறுவனங்களின் ஸ்டிக்கர் ஒட்டி போலி கம்பெனி நடத்தி வந்த தந்தை, மகன் கைது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே முன்னணி ரெடிமேட் ஜவுளி நிறுவனங்களின் ஸ்டிக்கர் ஒட்டி போலி கம்பெனி ஜவுளி வியாபாரம் செய்து வந்த தந்தை, மகன் கைது.
ராமராஜ், ஆலயா, உதயம் என 20க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் வணிக முத்திரையை போலியாக தயாரித்து விற்பனை செய்த ஜவுளிக்கடை உரிமையாளர், மகன் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் ராமராஜ் காட்டன் நிறுவனம், பனியன் உள்ளிட்ட உள்ளாடைகள், வேட்டி, சட்டைகளை தயாரிக்கிறது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குருவன்கோட்டையில் மகராஜன் ஜவுளி ஸ்டோர் நடத்திவரும் ராஜேந்திரன் 60, என்பவர் ஈரோடு மற்றும் திருப்பூரில் மலிவாக வேட்டி,சட்டை உள்ளாடைகளை வாங்கிவந்து, ராமராஜ், உதயம், ஆலயா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் ஸ்டிக்கர்களை தயாரித்து ஒட்டி விற்பனை செய்துள்ளார். இதற்காக ஆலங்குளத்தில் டைப்பிஸ்ட் செல்வகுமார் என்பவர் போலியான ஸ்டிக்கர்களை தயாரித்து தந்துள்ளார்.
திருநெல்வேலி ஜங்ஷன், சி பிரிண்ட் நிறுவனத்திலும் போலியான ஸ்டிக்கர்களை பிரிண்ட் செய்துள்ளனர். இதுகுறித்து ராமராஜ் நிறுவன மேலாளர் பாபு புகாரின் பேரில், ஆலங்குளம் போலீசார், மகராஜன் ஜவுளி நிறுவன அதிபர் ராஜேந்திரன், மகன்கள் திலகராஜ், ஜெயப்பிரகாஷ், தமிழரசன், பிரிண்ட் செய்து தந்த சி பிரிண்ட் நிறுவனம், தயாரித்து கொடுத்த ஆலங்குளம் செல்வகுமார் ஆகியோர் மீது 7 குற்றப்பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர். போலியான துணிகளும், ஸ்டிக்கர் தயாரிக்க பயன்படுத்திய ஜெராக்ஸ் மெஷின், ஸ்கேனர், கம்ப்யூட்டர் ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டன. ஜவுளிக்கடை அதிபர் ராஜேந்திரன், மகன் தமிழரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை தேடிவருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu