கொரோனா தடுப்பூசிகள் தட்டுப்பாடு -எம்எல்ஏ.,கள் குற்றச்சாட்டு

கொரோனா தடுப்பூசிகள் தட்டுப்பாடு -எம்எல்ஏ.,கள் குற்றச்சாட்டு
X

ஆலங்குளம் பகுதியில் கொரோனா தடுப்பூசிகள் தட்டுப்பாடு உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா குற்றம் சாட்டினார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ., அபூபக்கர்,ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ., பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் தென்காசி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மின்தடையால் அடிக்கடி பழுதாகிறது. அதனை சரி செய்ய வேண்டும். தற்போது பொதுமக்கள் அதிக அளவில் கொரோனா தடுப்பு மருந்துகளை எடுத்து வருகின்றனர்/

இந்த சூழ்நிலையில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதுமான கொரோனா தடுப்பூசிகள் இல்லை. அதனை மாவட்ட கலெக்டரிடம் கூறிய போது அவர் அதனை ஒப்புக் கொண்டார். தொடர்ந்து ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசிகள் இருப்பு வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!