கொரோனா பாதிப்பு முதியவர் பலி

கொரோனா பாதிப்பு முதியவர் பலி
X

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள நாகல்குளத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் கொரனாவால் பாதிக்கப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் தென்காசி மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதனிடையே பாவூர்சத்திரம், பெத்தநாடார்பட்டி குறும்பலாப்பேரி, கீழப்பாவூர் கொண்டலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அந்தப் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story