அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காங்கிரஸ் கவுன்சிலர் விவாதம்

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காங்கிரஸ் கவுன்சிலர் விவாதம்
X

கடையம் யூனியன் கவுன்சில் கூட்டம்.

பரபரப்பாக நடந்த விவாதத்தின் முடிவில் விரைவில் அனுமதி அளித்து சாலை மற்றும் அடிப்படை வசதிகள் அமைத்துக் கொடுக்கப்படும் என உறுதி கூறப்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தெற்கு கடையம் ஊராட்சியில் சிபா கார்டன் என்ற குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. சுமார் 300 க்கும் மேற்பட்ட வீடுகள் இங்கு அமைந்துள்ளது. அரசால் தரப்படும் இலவச வீடுகளும் இங்கு அமைந்துள்ளது. சுமார் 700 க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வருகின்றனர்.

இங்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்று கடையம் யூனியன் கவுன்சில் கூட்டத்தில், தெற்கு கடையம் காங்கிரஸ் கவுன்சிலர் மாரிகுமார் விவாதித்தார். அதற்கு பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் கணேசன் முறையான அனுமதி பெறவில்லை. அதனால் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க இயலாது என்று கூறினார்.

ஒரு சில வீடுகளுக்கு அனுமதி இருந்தாலும் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். இங்கு வசிக்கும் 700 மக்களை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுங்கள் என்று பதிலுக்கு காங்கிரஸ் கவுன்சிலர் மாரிகுமார் பேசினார். பரபரப்பாக நடந்த விவாதத்தின் முடிவில் விரைவில் அனுமதி அளித்து சாலை மற்றும் அடிப்படை வசதிகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்று உறுதி கூறப்பட்டது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா