போட்டியின்றி வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு விழா

போட்டியின்றி வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு விழா
X

தென்காசி மாவட்டம் காடுவெடடி ஊராட்சியில் போட்டியின்றி வெற்றி பெற்ற ஊராட்சி தலைவருக்கு நடந்த பாராட்டு விழா

தென்காசி மாவட்டம் காடுவெட்டி ஊராட்சியில் போட்டியின்றி வெற்றி பெற்ற தலைவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் காடுவெட்டி ஊராட்சியில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட முத்துலட்சுமி மருதுபாண்டினுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றிய செயலாளர் செல்லத்துரை அவர்கள் தலைமை தாங்கினார் கிளை செயலாளர் ஜேக்கப் முன்னிலை வகித்தார்.

மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் போஸ் என்ற மனோகரன் வரவேற்றுப் பேசினார் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்.

நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ் ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் திவ்யா மணிகண்டன் மாவட்ட கவுன்சிலர் முத்துலட்சுமி அன்பழகன் ஒன்றிய கவுன்சிலர் முத்துமாரி ஒன்றிய கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் சமுத்திர பாண்டியன் தட்டப்பாறை சுப்பிரமணியன் காவலா குறிச்சி பாலமுருகன், ராஜா கழக முன்னோடி ஐயம்பெருமாள் வார்டு உறுப்பினர்கள் புஷ்பலதா சூசைமணி, குமார ,முருகன், சாராள் மணி ,கல்பனா ,கடங்கனேரி ஊராட்சி உறுப்பினர் அசோக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர் முத்துலட்சுமி ஏற்பாட்டில் ஊரிலுள்ள அனைத்து குடும்பத்திக்கும் 10 கிலோ அரிசி வழங்கப்பட்டது. முடிவில் ஊராட்சி துணைத்தலைவர் மனோஜ் நன்றி கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!